இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ்

டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்திருப்பது பற்றி....

17,000 Dengue Cases in the State So Far This Year: Minister Arunraj

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்.

Published On :

இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது டெங்கு கட்டுக்குள்தான் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 17,049 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அரசு அலட்சியமாக இல்லை. டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

டெங்கு பாதிப்பை தடுப்பதிலும் அரசு உறுதியாக இருக்கிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் உள்ளனர். கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்களுடன் சேர்ந்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்பு தொடர்பாக ஆய்வுகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் கண்காணிக்கப்படுகிறது. அச்சம் தேவையில்லை, ஆனால் அலட்சியமும் கூடாது. காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். காய்ச்சல் முகாம்கள், கொசு ஒழிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Summary

Health and Family Welfare Minister Arunraj has stated that 17,000 people have been affected by dengue so far this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER