ஆவடி மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவுகளில் புதிய நடைமுறைகள் அமல்!
ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிறப்பு, இறப்பு பதிவுகளில் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறைகள் குறித்து...

ஆவடி மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவுகளில் புதிய நடைமுறைகள் அமல் - Avadi City Corporation..
ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிறப்பு, இறப்பு பதிவுகளில் புதிய நடைமுறைகள் வியாழக்கிழமை முதல் (அக்.1) அமலுக்கு வந்துள்ளது என மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிறப்பு, இறப்பு பதிவுத் தொடர்பான 2026-ன் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில், பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கான புதிய நடைமுறைகள் வியாழக்கிழமை முதல் (அக்.1) அமலுக்கு வந்தன.
அதன்படி, ஆவடி மாநகராட்சி உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு, இறப்பு நிகழ்ந்த நாளில் இருந்து, ஓராண்டுக்குள் வழக்கமான நடைமுறையில் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
ஓராண்டுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் தவறவிட்ட பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட் உத்தரவை பெறவேண்டும். பிறப்பு, இறப்பு குறித்த உண்மைத்தன்மை சரிபார்க்கப்படும். காலதாமதத்துக்கான நிர்ணயக் கட்டணம் செலுத்த வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் தவறவிட்ட பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்ய முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவு கட்டாயமாகும். சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு குறித்த உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்ட பின்னரே பதிவு செய்யப்படும். இதற்கும் காலதாமதத்துக்கான நிர்ணயக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.
New procedures implemented for birth and death registrations in Avadi City Corporation!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






