டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!
பெண்களுக்கு புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயண திட்டம் தொடக்கம்.

பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து திட்டத்தை தொடக்கிவைத்த முதல்வர் விஜய். - படம்: தமிழக அரசு
மகளிர் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் இன்று(அக். 2) தொடக்கி வைத்தார்.
அரசுப் பேருந்துகளில் ஏறிய முதல்வர் விஜய், பேருந்துகளில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டை வழங்கினார். பின்னர், பெண்கள் முதல்வர் விஜய்க்கு சாக்லேட்டுகளை வழங்கினார்கள்.
வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர, நகர்ப் பகுதி, புறநகர், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநர்களும் இலவசமாகப் பயணிக்கலாம். இதைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) நடைமுறையில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Chief Minister Vijay launched the ‘Vetri Payanam’ scheme today (Oct. 2) at Koyambedu, Chennai, expanding the free travel scheme for women.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





