
பெண்களுக்கு எந்தெந்த பேருந்துகளில் கட்டணமில்லை? முழு விவரம்!
மகளிர் கட்டணில்லா பேருந்து பயணத் திட்டத்தின் முழு விவரம்...
ச. ஜோசப் விஜய் - TNDIPR
மகளிர் கட்டணில்லா பேருந்து பயணத்தின் விரிவாக்க திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று காலை தொடக்கிவைத்தார்.
கடந்த திமுக ஆட்சியில் மாநகர சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புறநகா் அரசுப் பேருந்துகளிலும் மகளிா் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2 முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா்.
அதன்படி, இத்திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் இருந்து முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
எந்தெந்த பேருந்துகளில் இலவசம்?
வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், தாழ்தள அரசுப் பேருந்துகளிலும், இனி மகளிா் இலவசமாகப் பயணிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ், மாநகர குளிர்சாதன பேருந்துகளில் பயணிக்க முடியாது.
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகா் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிா் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநா்களும் இலவசமாகப் பயணிக்கலாம்.
Summary
On which buses can women travel for free? Full details!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





