
புதுச்சேரி தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்: தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன்
புதுச்சேரி தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் தெரிவித்திருப்பது பற்றி....

தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன்
புதுச்சேரி தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தும், அவரை ஆதரித்து தற்காலிக பேரவைத் தலைவரும் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட உடையார்நகர், வன்னியர் தெரு பகுதிகளில் விடு வீடாக சென்று தவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவார் என்றும், முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக அசோக் ஆனந்த் இருந்தபோது, அப்போதைய ஆளுமைகளான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைத் துணிச்சலாக எதிர்த்துப் போராடியவர், தொகுதி மக்களின் நலனுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி, துணைநிலை ஆளுநர் வரை சென்று பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு கொடுத்துள்ளார் என்றார்.
மேலும் முதல்வர் ரங்கசாமியுடனான அவரது ஆதரவு நிலைப்பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், முன்னாள் முதல்வர் நாராயணசாமி சதி செய்து, அசோக் ஆனந்த் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரது எம்.எல்.ஏ பதவியைப் பறித்தார். இருப்பினும், நீதிமன்றத்தில் போராடி தான் நிரபராதி என்பதை அவர் நிரூபித்துள்ளார். நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்தது மட்டுமின்றி, இந்த இடைத்தேர்தலில் மக்கள் மன்றமும் அவர் தவறு செய்யாதவர் என்பதை நிரூபிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், சமீபத்தில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2,500 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் பல கோடி ரூபாய் பணம் எந்த வேட்பாளருக்கு உரியது என்பதைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் மலிவான குற்றச்சாட்டுகளையும், ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பொய் பிரசாரங்களையும் பரப்புவதாகவும், உண்மையை கூறி வாக்கு கேளுங்கள் எனத் தெரிவித்தார்.
Summary
Pro-tem Speaker Anbazhagan has stated that the Puducherry Election Commission must function with transparency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





