'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம்: மு.க. ஸ்டாலின்

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரம் பற்றி....

Congress party in Puducherry is a closed chapter: M.K. Stalin

மு.க. ஸ்டாலின்.

Published On :

புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புதுவை தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து, காணொலி வாயிலாக அவர் மேற்கொண்ட பிரசாரத்தில், புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்தபோதெல்லாம், புதிய புதிய திட்டங்களை இந்த மாநிலத்துக்கு நிறைவேற்றி இருக்கோம். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற தலைவர் கலைஞரின் வாக்குப்படி, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு இருக்கிறோம். தாலிக்கு தங்கம் திட்டம், சத்துணவில் முட்டை திட்டம், இதோ, உங்கள் கண்ணெதிரே சிறப்பாகச் செயல்பட்டு வரும் லாஸ்பேட்டை உழவர்சந்தை போன்றவை, திமுக அரசின் காலத்தை வெல்லும் சாதனைகள். இதை எல்லாம் மனதில் வைத்து, நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தட்டாஞ்சாவடி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எதிர்கொண்டிருக்கும் இந்த இடைத்தேர்தல், இயற்கையாக நடக்கும் தேர்தல் கிடையாது. இது, உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல்!

முதல்வர் ரங்கசாமி, கடந்த பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் நின்றார். வெற்றியும் பெற்றார். சட்டப்படி, ஒரு தொகுதியில் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியக் கைவிட்டுவிட்டார். அதாவது, அவரை நம்பி வாக்களித்த உங்களைக் கைகழுவி விட்டார். அதனால், இந்த முறை நீங்களும் அவரை கைவிட்டு விடுங்கள். இந்த இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக ஒருவரை முதல்வர் ரங்கசாமி நிறுத்தியிருக்கிறார். அவர் யார் என என்னைவிட உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

கடந்த தேர்தலில், அந்த நபர் போட்டியிட நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என்றும் உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் முதல்வர் ரங்கசாமி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். மறுபுறம், காங்கிரஸ் கட்சியும் அவர்கள் பங்குக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர் என்றால், இந்த காங்கிரஸ் வேட்பாளர் சாராய சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார் எனப் புதுவையில் எல்லோருக்குமே தெரிந்துள்ளது.

தனக்கு பிரச்னை வரும்போது மட்டும்தான், மாநில அந்தஸ்து அஸ்திரத்தை முதல்வர் ரங்கசாமி கையில் எடுப்பார். சட்டப்பேரவையில் தீர்மானம் போட தெரிந்த ரங்கசாமி! அதிகாரிகள் தடுக்கிறார்கள் எனக் கூப்பாடு போடும் ரங்கசாமி ! புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென, சட்டப்பேரவை உறுப்பினர்களை தில்லிக்கு அழைத்துக் கொண்டு போய், போராடலாமே? ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்? உங்கள் கூட்டணிக் கட்சியிடம்தானே ஒன்றிய அரசு இருக்கிறது? கடந்த தேர்தலிலேயே புதுவைக்கு மாநிலத் தகுதி பெற்றுத் தருவேன் எனக் சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள்? நம்பி வாக்களித்த மக்களுக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.,வும் செய்ததெல்லாம் துரோகம் மட்டும்தான்!

இன்னொரு துரோகமும் களத்தில் நிற்கிறது. கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி இங்கு களம் காண்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஐந்து தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து, கூட்டணியில் இருந்துகொண்டே வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆனாலும், தி.மு.க துரோகத்தை வென்றெடுத்தது. காலாப்பட்டு, ராஜ்பவன் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். துரோகிகள் படுதோல்வி அடைந்தனர். அதே தோல்வியை இந்த தட்டாஞ்சாவடி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சிக்குப் பரிசளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு டெப்பாசிட் கூட கிடைக்க கூடாது. புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம். நமக்கு எதிராக நிற்கும் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் இந்த இடைத்தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

Summary

DMK President M.K. Stalin has criticized that, as far as Puducherry is concerned, the Congress party is a closed chapter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER