ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்பு

உருவ கேலி! மு.க. ஸ்டாலின் வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல! - சிபிஎம் கண்டனம்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...

cpm condemns dmk leader mks

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் - பெ. சண்முகம். - கோப்புப் படம்

Published On :

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவ கேலி செய்யும் வகையில் பேசிய திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று (அக்.2) ஈடுபட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு, தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினின் பேச்சு அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்தது அல்ல எனக் கூறி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“உருவ கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது.

மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்” எனக் கூறியுள்ளார்.

Summary

CPIM has condemned DMK leader M.K. Stalin for making remarks that mocked the physical appearance of the Tarapuram TVK candidate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.