சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி....

மு.க. ஸ்டாலின் / அமைச்சர் அருண்ராஜ்.
தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! என்று தெரிவித்துள்ளார்.
Summary
"Health and Family Welfare Minister Arunraj has strongly condemned DMK President M.K. Stalin for body-shaming TVK candidate Satyabhama."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





