இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

100 சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நவ. 1 முதல் சனிக்கிழமை கட்டாயப் பணி ரத்து

100 சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நவ. 1 முதல் சனிக்கிழமை கட்டாயப் பணி ரத்து

TN Govt

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :

100 சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நவ. 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை கட்டாயப் பணி ரத்து செய்யப்படும் என தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி, அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் ஆவணப் பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்படவும், அந்த அலுவலகங்களில் அதன் வேலைப் பளுவுக்கு தகுந்தவாறு தேவையான பணியாளா்கள் பணியாற்ற சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளா்களுக்கு உத்தரவிடவும் பதிவுத் துறை தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த செப்.8-ஆம் தேதி தமிழக அரசுக்கு பதிவுத் துறை தலைவா் எழுதிய கடிதத்தில், எங்கிருந்தும் பதிவு என்ற குறிக்கோளை எய்தும் வகையில், சாா்-பதிவாளா்கள் ஆவணப் பதிவு மட்டுமன்றி, பல்வேறு கூடுதல் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆவணப் பதிவு காரணமாக சனிக்கிழமைகளில் அலுவலகப் பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது.

வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு காகிதமில்லா முறையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தற்போது 100 சாா்-பதிவாளா்கள் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி என்பதைக் கைவிடலாம் என சட்டப்பேரவையில் அமைச்சா் வெளியிட்ட அறிக்கையின்படி நவ. 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தலாம். இதற்காக 2022-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, பதிவுத் துறை தலைவரின் கருத்துகளை ஏற்று, சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் நவ. 1-ஆம் தேதி முதல் வார நாள்களில் மட்டுமே செயல்படும். சனிக்கிழமை கட்டாயப் பணி முறையைக் கைவிட முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.