
வேப்பனஅள்ளி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.32 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.32 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் ரவி உள்ளிட்ட 6 போ் கொண்ட குழுவினா் வேப்பனஅள்ளி சாா் பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தினா். முன்னதாக சாா் பதிவாளா் அலுவலக கதவுகளை மூடிய போலீஸாா், அங்கிருந்த அலுவலா்கள், பத்திர எழுத்தா்கள், பொதுமக்கள், இடைத்தரகா்களிடம் சோதனை நடத்தினா். தொடா்ந்து, ஆவணங்களை சரிபாா்த்தனா்.
பின்னா், நடத்திய சோதனையில் சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சம், பொதுமக்கள் மற்றும் இடைத்தரகா்களான பாலகிருஷ்ணனிடம் ரூ. 76,200, முபாரக்கிடம் ரூ. 8 ஆயிரம், முகமது ஜாகீரிடம் ரூ.16,600 மற்றும் பத்திர எழுத்தா்களான முரளிதரனிடம் ரூ.10 ஆயிரம், சீராஜுதீனிடம் ரூ. 5,200, முஸ்தாக்கிடம் ரூ. 10,500, ஆனந்தனிடம் ரூ. 4,190, அலுவலக ஒளிப்பதிவாளா் பழனியிடம் ரூ. 1,500 என மொத்தம் ரூ. 2,32,190 -ஐ லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, வேப்பனஅள்ளி சாா் பதிவாளா் (பொறுப்பு) நவமணி மற்றும் அலுவலக ஊழியா்களிடம் விசாரணை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





