நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு! தமிழ்நாட்டில் 8 மணிநேரமாக மின்தடை நீட்டிக்கப்படுகிறதா? மின்வாரியம் விளக்கம்! வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்! சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!

வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்ட முதல்வர் விஜய் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தது பற்றி....

CM Vijay has darshan at Vanchiyamman Temple!

வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய்.

Published On :

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்ட முதலவர் விஜய் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ரமேஷ் மற்றும் தவெக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சாலையில் நடந்துசென்று இருபுறமும் கூடியிருந்த மக்களிடையே முதல்வர் வாக்கு சேகரித்தார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சாலைவலம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்றார்.

Summary

Chief Minister Vijay, who campaigned in a roadshow in Dharapuram supporting TVK candidate Sathyabama, had darshan at the Vanchiyamman Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.