
தாராபுரம் பிரசாரம்: முருங்கைக்காய் பறித்த முதல்வர் விஜய்!
முதல்வர் விஜய் பிரசாரத்துக்கு இடையே முருங்கைக்காய் பறித்தது குறித்து...

தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் முதல்வர் விஜய், பிரசாரத்துக்கு இடையே முருங்கைக்காய் தோட்டத்தில் முருங்கைக்காய் பறித்ததார்.
தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருகைத்தந்துள்ளார்.
தவெக பிரசார வாகனத்தில் ஏறி, சாலைவலம் மேற்கொண்டு வரும் முதல்வர் விஜய், மாட்டுவண்டியில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தாராபுரம் மூலனூர் பகுதியில், முருங்கைக்காய் தோட்டத்தில் முருங்கைக்காய் பறித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர், முருங்கை விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் முருங்கைக்காய்களை பரிசாக அளித்தனர்.
தொடர்ந்து, வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
Summary
While campaigning in the Dharapuram constituency, Chief Minister Vijay plucked drumsticks from a drumstick orchard during a break in his campaign activities.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






