காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

சமூக வலைதளத்தில் சாதிய மோதலை தூண்டும் வகையில் பதிவு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் சாதிய மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

Youth arrested for social media post inciting caste-based conflict

கைது செய்யப்பட்ட சிவதரிஷ். - டிஎன்எஸ்

Published On :

சிவகங்கை: சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சாதிய விரோதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்ட இளைஞரை சிவகங்கை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், ‘சிவகங்கை மாவட்டத்தை நோக்கி தன்மானப்படை’ வருவதாகக் கூறி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சாதிய பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட சமூக வலைதள கண்காணிப்புப் பிரிவினா் வலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்தனா். இதுதொடா்பாக கடந்த ஆக. 31-ஆம் தேதி சிவகங்கை இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

தொடா்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்து அதற்குரிய முகவரியை போலீஸாா் கண்டறிந்தனா்.

அப்போது இதில் ஈடுபட்டவா் காரைக்குடி தாலுகா, ஊஞ்சனை அருகே மீனாவயல் பகுதியைச் சோ்ந்த சிவதரிஷ் (19) என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை காரைக்குடியில் சிவதரிஷை போலீஸாா் கைது செய்தனா். பிறகு அவா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிவகங்கை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவா்கள், சாதிய மோதல்களைத் தூண்டுபவா்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரித்தாா்.

Youth arrested for social media post inciting caste-based conflict

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.