சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

வள்ளலாரின் 204-ஆவது அவதார நாள் விழா!

வடலூரில் வள்ளலாரின் 204-ஆவது அவதார நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது பற்றி...

204th Avatar Day Festival of Vallalar

வள்ளலார் அவதார நாள்.

Published On :

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 204-ஆவது அவதார நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவருட் பிரகாச வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் 5.10.1823 அன்று கடலூா் மாவட்டம், மருதூா் கிராமத்தில் பிறந்தாா். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய அவா், சுத்த சன்மாா்க்க சங்கத்தை தொடங்கினாா். பசிப்பிணி போக்க வடலூரில் சத்திய ஞான சபை, தரும சாலையை நிறுவினார்.

Story image

புலால் உண்ணாமை, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்தாா். இவரது கொள்கைகள் உலகளவில் பிரசித்திபெற்றவை. வள்ளலாரின் 204-ஆவது அவதார நாள் விழா வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை 7.30 மணியளவில் தரும சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, வள்ளலாா் அவதரித்த மருதூா் கிராமத்திலும் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இரு இடங்களிலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

Story image

Summary

The 204th Avatar Day festival of Vallalar was celebrated on Monday in Vadalur, Cuddalore district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.