சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...

Private Luxury Bus Overturns Near Ulundurpet; Passengers Injured

விபத்துக்குள்ளான பேருந்து.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பயணிகள் காயம் அடைந்தனர்.

சென்னையிலிருந்து சுமார் 36 பயணிகளுடன் தனியார் சொகுசுப் பேருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புறப்பட்டது. இப்பேருந்தை திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த பா.பாலமுருகன் (30) ஓட்டிச் சென்றார்.

இந்த பேருந்து திங்கள்கிழமை காலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பாதூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக சாலையின் இடதுப் புறத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Story image

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் பாலமுருகன், பேருந்து உதவியாளர் திருச்சி ரா. பைசல் (18), மதுரை ஞா. ஐஸ்வர்யா (18), அகிலன் (14), ஞா.முத்துலட்சுமி (48), சென்னை புதுப்பேட்டை ஜோ. ஜோசினி (23), குரோம்பேட்டை அ. ஹாசினி (23) , அ. சஞ்சய் (22) , தாம்பரம் பா.சைலஜா (26), பெரம்பலூர் து. கிருஷ்ண மூர்த்தி (39), மதுரை கு. ராஜேந்திரன் (68) உள்ளிட்ட 14 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசாரும் , உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்களும் நிகழ்விடம் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து அனைவரும் சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

14 passengers were injured when a private luxury bus overturned near Ulundurpet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.