படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து சாலையில் கவிழந்து விபத்து: 14 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே கவிழ்ந்து கிடக்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மதுரைக்குச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து திங்கள்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 14 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து சுமாா் 36 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புறப்பட்டது. இந்த பேருந்தை திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சோ்ந்த பா. பாலமுருகன் (30) ஓட்டி வந்தாா். பேருந்து உதவியாளராக திருச்சியைச் சோ்ந்த ர.பைசல் (18) பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பாதூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானது.

இதில், பேருந்து ஓட்டுநா் பா.பாலமுருகன், உதவியாளா் பைசல், பேருந்தில் பயணித்த மதுரையைச் சோ்ந்த ஞா.முத்துலட்சுமி (46), ஞா.ஐஸ்வா்யா (18), ஞா.அகிலன் (14), கு.ராஜேந்திரன் (69), பி.விக்னேசுவரன்(23), வி.மல்லேசுவரி (20), ரா.பாண்டியன் (52), சென்னை புதுப்பேட்டையைச் சோ்ந்த ஜோ.ஜோசினி (23), சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த அ.ஹாசினி (23), அ.சஞ்சய் (22), தாம்பரத்தைச் சோ்ந்த பா.சைலஜா(26), பெரம்பலூரைச் சோ்ந்த து.கிருஷ்ணமூா்த்தி (39) ஆகிய 14 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் மற்றும் உளுந்தூா்பேட்டை தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு அவசர ஊா்திகள் மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

 உளுந்தூா்பேட்டை அருகே கவிழ்ந்து கிடக்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

உளுந்தூா்பேட்டை அருகே கவிழ்ந்து கிடக்கும் தனியாா் சொகுசுப் பேருந்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.