
தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!
மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூ. வேட்பாளர்கள் வாக்களித்ததைப் பற்றி...

சத்தியபாமா - லட்சுமணன் - சுகன்யா - பானுமதி.
மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சந்தியபாமா (தாராபுரம்) இவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால், இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தமிழக வெற்றிக் கழகம், எதிர்க்கட்சி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடது சாரிகள் என்று ஐந்து முனைப் போட்டி உருவானது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையிலேயே தொடங்கியதும் வாக்குச் சாவடிக்கு வந்த திமுக வேட்பாளர் சுகன்யா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மதுக்கம்பாளையம் பள்ளியில், மணக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன், வீராச்சிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் பானுமதி ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்தத் இடைத்தேர்தலில் தாராபுரம் பேரவைத் தொகுதி தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் செள. சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாதக சார்பில் மு.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.
இங்கு 1,07,285 ஆண் வாக்காளர்கள், 1,16,013 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 பேர் உள்பட மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் இன்று (அக். 6) பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற அக். 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Summary
Candidates from the DMK, AIADMK, and Communist parties cast their votes in the ongoing by-election in Maduranthakam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






