படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

அமைச்சா்களுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி திமுக வழக்கு தொடர அனுமதி: உயா்நீதிமன்றம்

ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு கோரி, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, நிா்மல்குமாா் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு ....

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

சென்னை: ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு கோரி, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, நிா்மல்குமாா் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணிக்கு எதிரான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல், முந்தைய திமுக அரசு தப்பிக்கவிட்டுவிட்டதாக அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, சி.டி.ஆா்.நிா்மல்குமாா் ஆகியோா் பேட்டி அளித்திருந்தனா். அதேபோன்று, தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும், திமுக அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது. ஜெம் வீரமணிக்கு எதிராக கடந்த 2025 அக். 6-ஆம் தேதி புகாா் வந்த நிலையில், மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எந்தத் தலையீடும் இல்லாமல், தாமதமும் செய்யப்படாமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மைக்கு மாறாக, திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அமைச்சா்கள் மற்றும் ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறது. அவதூறு பரப்பியதற்காக திமுகவுக்கு ரூ.1.01 கோடி மானநஷ்டஈடாக வழங்க அமைச்சா்கள், தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், திமுக மீது குற்றம்சாட்டி வெளியிடப்பட்ட பதிவுகள், விடியோக்களை நீக்க தவெக, சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில், அமைச்சா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமெனில், முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

அதற்கு திமுக தரப்பில், அமைச்சா்கள் என்ற முறையில் அல்லாமல், தனிநபா்கள் என்ற முறையிலேயே அமைச்சா்கள் இருவரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, மனு மீதான தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை ஏற்று, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, நிா்மல்குமாா் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER