
அமைச்சா்களுக்கு எதிரான திமுக வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
வீரமணி வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி பேச அமைச்சா்கள் நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா, தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது குறித்து...
அமைச்சர்கள் நிர்மல் குமார் - நிர்மல் குமார்
‘ஜெம்’ வீரமணி வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி பேச அமைச்சா்கள் நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை செப்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெம் வீரமணி வழக்கில் குற்றவாளிகளை முந்தைய திமுக அரசு தப்பிக்கவிட்டு விட்டதாக அவதூறு பரப்பியதற்காக திமுகவுக்கு ரூ.1.1 கோடி மானநஷ்டஈடாக வழங்க அமைச்சா்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், திமுக மீது குற்றம்சாட்டி வெளியிடப்பட்ட பதிவுகள், விடியோக்களை நீக்க தவெக, சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவுக்கு அமைச்சா்கள் நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலளிக்க உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தவெகவும் திமுகவும் ஒருவா் மீது ஒருவா் மாறிமாறி குற்றம்சாட்டி அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.30-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
அப்போது திமுக தரப்பில், உயா்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி இந்த விவகாரம் குறித்து தவெகவினா் தொடா்ந்து பேசி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. அரசு தலைமை வழக்குரைஞா் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





