
மேட்டூர் அணையில் தேசிய அணை பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள் ஆய்வு!
மேட்டூர் அணையில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தெற்கு மண்டல இயக்கக இயக்குநர் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக...

மேட்டூர் அணையில் ஆய்வு. - கோப்புப்படம்
மேட்டூர் அணையில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தெற்கு மண்டல இயக்கக இயக்குநர் கிரீதர், உதவி இயக்குநர் கலீல் அகமது ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அணையின் இடது கரையில் கவர்னர் வியூபாயின்ட் உபரி நீர் போக்கியான பதினாறு கண்பாலம், வலது கரையில் மேல்மட்ட அடுக்கு, கீழ்மட்ட மதகுகள் நிலவரம், ஆய்வுச் சுரங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மதகுகளை இயக்கி சோதனையிட்டனர். உபரி நீர் போக்கி பகுதியில் ஆர்ச் வலுவூட்டும் பணிகளை ஆய்வு செய்தனர்.
பராமரிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் பெயிண்ட் உள்ளிட்ட பொருள்கள் தரமானதா என்பதை பார்வையிட்டனர். சேலம் நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், அனைத்து பிரிவு உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேட்டூர் அணையின் நீர் வரத்து, நீர் திறப்பு, நீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.
Summary
Giridhar, Director of the Southern Regional Directorate of the National Dam Safety Authority, and Assistant Director Khalil Ahmed conducted an inspection at the Mettur Dam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






