மேட்டூர் அணையில் தலைமை பொறியாளர் குழு ஆய்வு!
மேட்டூர் அணையில் தலைமை பொறியாளர் ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தது குறித்து...

16 கண் பாலத்தின் வளைவுகள் வலுப்படுத்தும் பணியினை ஆய்வு செய்த குழு. - படம் - தினமணி
மேட்டூர் அணையில் தலைமை பொறியாளர் ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை (நவ. 19) ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணையின் உபரி நீர் போர்க்கியான 16 கண் பாலத்தின் வளைவுகள் வலுப்படுத்தும் பணியினை தரக் கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான பதினாறு கண் பாலத்தில் உள்ள வளைவுகள் நவீன முறையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில் உள்ளது.
பணியின் நிலைமை மற்றும் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இக்குழு மேட்டூர் அணையின் 16 கண் பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
வளைவுகளை வலுப்படுத்தும் பணி இன்னும் இரண்டு வார காலத்தில் நிறைவடைய உள்ளது. குழுவினருடன் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட குழுவினர் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கவர்னர் வியூ பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.
Summary
A six-member team led by Chief Engineer Raja conducted an inspection at the Mettur Dam on Thursday (Nov. 19).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


