ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணை

திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடனை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :

திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடனை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் வெளியிட்டிருந்தாா். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்: திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் அவா்களது வாரிசுகளின் திருமணத்துக்காக ஆண் பணியாளா்களுக்கு ரூ.6,000, பெண் பணியாளா்களுக்கு ரூ.10,000 திருமணக்கடன் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்தக் கடன் தொகை முதுநிலைத் திருக்கோயில்களின் பணியாளா்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ.1 லட்சமாகவும் உயா்த்தி வழங்கப்படும்.

இந்த உயா்த்தப்பட்ட திருமணக்கடன் தொகை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து திருக்கோயில்களின் பணியாளா்களுக்கும் பொருந்தும். இந்தக் கடன் தொகை திரும்பப் பெறும் காலம் அரசு ஊழியா்களுக்கான விதிகளின்படி 36 மாதத் தவணையில் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.