லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

பிரேம் ஆனந்த் சின்ஹா
தாம்பரம் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்ததற்கு பின்னர் நிர்வாக ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குநராக, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடந்த மே 26 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது தவெக பிரசாரத்துக்கு அருண் ஐபிஎஸ் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றச்சாட்டுகளை முன்வத்திருந்தனர்.
அதன்பின்னர், ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கில் முன்னாள் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக தாம்பரம் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை முதன்மைச் செயலர் ஏ. கார்த்திக் ஐ.ஏ.எஸ் அவசர உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர ஆணையர் அமல்ராஜுக்கு தாம்பரம் ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Summary
The Tamil Nadu government has announced the appointment of Prem Anand Sinha, the former Commissioner of Tambaram, as the Director of the Directorate of Vigilance and Anti-Corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

