விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்: அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி பற்றி....

அமைச்சர் செங்கோட்டையன் - எக்ஸ்
விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூரில் அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம்தான் வெற்றி பெறும். அதற்கான நல்ல வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது. முதல்வர் விஜய்யை மக்கள் பாராட்டுகிறார்கள். விஜய்தான் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.
அவருடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டாகும். விஜய்க்குப் பின்னால் இந்த நாடே இருக்கிறது. விஜய்யை நாட்டு மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். இந்த வெற்றியை வாங்கித் தந்த பெருமை விஜய்யைச் சேரும். இந்தத் தொகுதிக்காக இரவு பகல் பார்க்காமல் அனைவரும் உழைப்போம்.
இது விஜய்யின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருப்பார். விஜய்யின் நடவடிக்கையை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறந்த முறையில் அரசு பணியாற்ற மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்" என்றார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதேபோல் மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

