விசிக கூட்டணியைத் தக்கவைக்க திமுக விரும்பவில்லை: திருமாவளவன்
திமுக கூட்டணியில் இருந்தபோது சாதியவாத கட்சிகள் எங்களை வசைபாடின என திருமாவளவன் பேசியது குறித்து...

திருமாவளவன் - எக்ஸ்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ள திமுக விரும்பவில்லை என அக்கட்சியின் திருமாவளவன் இன்று (அக். 11) தெரிவித்தார்.
திண்டிவனத்தில் விசிக சார்பில் எழுச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திருமாவளவன் பேசியதாவது:
''தற்போது நமக்கு அமைந்திருப்பது காலம் போட்ட கணக்கு. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என விரும்பினோம். அது தற்போது நடந்துள்ளது.
விசிக உடனான கூட்டணியை திமுக தக்கவைத்துக்கொள்ளவில்லை. இடைத்தேர்தலில் 2 ஆம் இடம் பெற்றதாக திமுக கூறுகிறது; அப்படி என்றால் முதல் இடம் பிடித்த கூட்டணி வேறு அல்லவா?
சூழ்ச்சி, வஞ்சகத்தை அறுத்தெறிந்து நேர்மையாக இருந்ததால் அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சதி, சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி செய்பவர்கள் மத்தியில் அரசியல் செய்து வருகிறது விசிக.
திமுக கூட்டணியில் இருந்தபோது சாதியவாத கட்சிகள் எங்களை வசைபாடின. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என நாங்கள் எதனையும் செய்யவில்லை; மீண்டும் கூறுகிறேன், அது தானாக நடந்தது.
இடைத்தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் எங்கு சென்றுள்ளன? வன்னியர் வாக்குகள் எங்கு சென்றுள்ளன? ஆதாரங்கள் இருந்தால் காட்டட்டும்.
திருமாவளவனுக்கு கட்சியில் சீட்டு கொடுக்கவில்லை என இருவர் அதிருப்தியாக இருப்பதால், விசிக கூடாரம் காலி என்று கருதுவது தவறு. உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த பிறகு முதல்வர் விஜய் எனக்கு தொலைபேசியில் அழைத்துப்பேசினார்.
விஜய்யை வைத்து என்னை தாக்க நினைக்கின்றனர். அதே விஜய் தொடர்புகொண்டு பேசி பாராட்டும் அளவுக்கு திருமாவளவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
அடங்கமறு என்ற முழக்கத்திற்கு பின்னால் இருக்கும் அரசியலை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்த் தேசியம் பேசுகிறது என்கிறார்கள். சீமானுடன் அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள் கிடையாது. சாதி, மத வெறியர்களே உள்ளனர். தெலுங்கு எதிர்ப்புதான் தமிழ்த் தேசியம் என்று திரிபுவாதம் செய்கிறார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
DMK did not wish to retain the alliance with VCK: Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


