எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி!

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்வின் மேடையில் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது ஏன்? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி - முதல்வர் விஜய் கலந்துகொண்ட அரசு நிகழ்வின் மேடையில் நயினார் நாகேந்திரன்

Published On :

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்வின் மேடையில் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது ஏன்? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் –IIன் முதல் 14.64 கி.மீ. உயர்மட்டப் பாதை உள்ளிட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்து, இரயில்வே திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டது ஏன்? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட விடியோ பதிவில், “இன்று பிரதமருடைய திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றன. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட திருமங்கலம் - கொல்லம் செல்கின்ற நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி முடிந்திருக்கிறது. அதில் ஒரு பகுதியை பிரதமர் இன்று திறந்து வைத்துள்ளார். அதில், முதல்வர் கலந்துகொண்டார். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னையும், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டார்கள்.

அதேபோல, (மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்) நிதின் கட்கரி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இவ்வளவு பெரியத் திட்டத்தை திறந்து வைக்க அவர் கலந்துகொள்ளாதது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அதேமாதிரி எந்தப் பொறுப்பிலும் இல்லாத, எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாகக் கூட இல்லாத அண்ணன் நயினார் நாகேந்திரன் எப்படி மேடையில் உட்கார்ந்தார். எந்த ப்ரோட்டோகாலின்படி என்று எனக்குத் தெரியவில்லை. பிரதமருடன் அவர் எந்த ப்ரோட்டோகாலின்படி (நெறிமுறை) அமர வைக்கப்பட்டார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. இது மத்திய அரசின் நிகழ்ச்சி. இதற்கென சில ப்ரோட்டோகால் இருக்கின்றன. உள்ளூர் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், உள்ளூர் எம்.பி.க்கள் இருக்கலாம் என்பதுதான் ப்ரோட்டோகால். ஆனால், நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவரை எப்படி இன்று மேடையில் மோடி அமர வைத்தார். இது என்ன குறிப்பிடத்தக்க இப்படிப்பட்ட பழக்கங்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” எனப் பேசியுள்ளார்.

Summary

Manickam Tagore has questioned why Nainar Nagendran was seated on the dais at the government event attended by Prime Minister Modi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER