நவராத்திரி பூஜை: பழனி கோயிலில் 10 நாள்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து!
பழனி கோயிலில் 10 நாள்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக....

பழனி மலைக் கோயில் - கோப்புப்படம்
நவராத்திரி பூஜையையொட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், அக். 20 ஆம் தேதி வரை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில், நவராத்திரி பூஜை நடைபெறவுள்ளதால், பழனி கோயிலில் 10 நாள்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று(அக். 11) முதல் அக். 20 ஆம் தேதி வரை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில் இன்று முதல் அக். 20 முடிய நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு, திருக்கோயில் முன்வழக்கப்படி அக். 20 வரை மலைக்கோயில் தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது.
அக். 21 முதல் தொடர்ந்து வழக்கம் போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The temple administration has announced that the Golden Chariot procession at the Palani Dandayuthapani Swamy Temple has been cancelled until October 20 in connection with the Navaratri festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

