இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

மேட்டூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து: 26 பேர் காயம்

மேட்டூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்தது குறித்து...

Accident: Government bus rams into stationary private bus near Mettur

மேட்டூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து - டிஎன்எஸ்

Published On :

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 26 பேர் காயமடைந்தனர்.

மேட்டூரில் இருந்து திங்கள்கிழமை காலை ஈரோட்டிற்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து நவபட்டி அருகே பயணிகளை ஏற்றுவதற்காக நின்றிருந்தது. அப்போது மேட்டூரில் இருந்து 40 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. தனியார் பேருந்தை முந்த முயன்றபோது எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதாமல் செல்வதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இடது புறமாக திருப்பினார். எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது.

இதில், அரசு பேருந்து முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அரசு பேருந்தில் பயணம் செய்த சந்திரா, வாசுகி (28), பிரியா (38), சபீதா (27), கோபிகா (27), ஜீவிதா (19), ரமணி (34) உள்பட 8 பெண்களும் அரசு பேருந்து ஓட்டுநர் கோபி (46), நடத்துநர் விஸ்வநாதன் (55) உள்பட 16 ஆண்களும், ஜாய் சதன் (11), ஆகாஷ் (6) என்ற இரண்டு சிறுவர்களும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் மட்டும் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

விபத்து காரணமாக மேட்டூர் பவானி சாலையில் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Accident: Government bus rams into stationary private bus near Mettur; 26 injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.