அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அக். 16-ல் கோவை செல்லும் முதல்வர் விஜய்! பெரியாா் அறிவுலகத்தை திறந்து வைக்கிறார்!

பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கவுள்ள முதல்வர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய்.

தமிழக முதல்வர் விஜய். - படம்: பிடிஐ.

Published On :

பெரியாா் அறிவுலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 16-ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் சி. ஜோசப் விஜய், திறந்து வைக்க உள்ளார்.

கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே கடந்த 2024 நவம்பா் 6-ஆம் தேதி ரூ. 300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன், 1,98,000 சதுர அடி பரப்பளவில் பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதில் ஒரு லட்சம் புத்தகங்கள், அறிவியல் மையத்தில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள், ஆராய்ச்சி படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அக். 16-ல் கோவை செல்லும் முதல்வர் விஜய், பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் முதல்வர் விஜய் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதற்காக, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யாபாரதி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அறிவுலகம் மற்றும் கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனா். அந்தப் பகுதியைச் சுற்றிய சாலைகள், வீதிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

With the construction of 'Periyar Arivulagam' now complete, Chief Minister C. Joseph Vijay is set to inaugurate it during his visit to Coimbatore on the 16th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.