முதல்வர் விஜய் நாளை ஆந்திரம் செல்கிறார்! பயணத் திட்டம் வெளியானது!
முதல்வர் விஜய்யின் ஆந்திர பயணத்திட்டம் பற்றி...

முதல்வர் விஜய் - கோப்புப்படம்
தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் நாளை (அக். 13) ஆந்திரப் பிரதேசத்துக்கு செல்லவுள்ள நிலையில், அவரின் பயணத்திட்டம் வெளியாகியுள்ளது.
முதல்வரான பிறகு முதல்முறையாக ஆந்திரத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் விஜய், நாளை பிற்பகல் 2 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படுகிறார்.
ஆந்திர மாநிலம், கன்னாவரம் விமான நிலையத்துக்கு நாளை பிற்பகல் 3.30 மணியளவில் சென்றடையும் முதல்வர் விஜய், மாலை 4.30 மணியளவில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
அப்போது, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீா் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் முதல்வா் விஜய் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர், விஜயவாடாவில் கிருஷ்ணா நிதிக் கரையில் அமைந்துள்ள கனகதுா்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணியளவில் முதல்வர் விஜய் தரிசனம் செய்யவுள்ளார்.
அப்போது, ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணையும் முதல்வா் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, நாளை இரவு 8.30 மணியளவில் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்படவுள்ளார்.
நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதி நீா் பிரச்னைக்கு தீா்வுகாண கா்நாடக முதல்வா் டி.கே.சிவக்குமாரை கடந்த ஆக. 3-ஆம் தேதி சந்தித்து பேச்சு நடத்த முதல்வா் விஜய் திட்டமிட்டிருந்தாா். ஆனால், எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் முதல்வா் விஜய் அதைக் கைவிட்டாா்.
இதையடுத்து, கடந்த ஆக. 20-ஆம் தேதி சென்னை அருகே மாமல்லபுரத்தில் தென் மண்டல முதல்வா்கள் மாநாடு நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வா்கள் விஜய், டி.கே. சிவக்குமாா், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேச்சின் மூலம் நீண்டகால நதி நீா் பிரச்னைகளுக்கு தீா்வுகாண தென் மாநில முதல்வா்கள் ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா அப்போது தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay visits Andhra Pradesh tomorrow - Itinerary released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


