ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

காலி மது பாட்டிலை பெறும் இயந்திரம் நிறுவ டெண்டர்! இறுதி முடிவெடுக்க தமிழக அரசுக்கு தடை!

காலி மது பாட்டிலை பெறும் இயந்திரம் நிறுவ விடுக்கப்பட்ட டெண்டர் மீது இறுதி முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிப்பு...

Chennai High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெற, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவுவதற்கான டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைத்து இயக்க, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி, பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநிலம் முழுவதற்கும் சேர்த்து ஒரே நிறுவனத்தை இப்பணிக்கு நியமிக்க இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் டெண்டர் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டரை ரத்து செய்து, மாவட்ட அளவில் காலி பாட்டில்கள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பங்கேற்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 22 ஆம் தேதி கடைசி நாள் எனவும், அன்றைய தினம் மாலை தொழில்நுட்ப டெண்டர் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், டெண்டர் நிபந்தனைகளை பூர்த்தி செய்வோர், டெண்டரில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, டெண்டரை திறக்கலாம்; இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Summary

Tender to install machines for collecting empty liquor bottles! Tamil Nadu government restrained from taking a final decision!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.