6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்

வீரத் தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி முதல்வர் விஜய்யின் பதிவு.

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :

உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் தியாகி சங்கரலிங்கனார் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

வீரத் தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

”நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாள்கள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற
தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். 

தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has stated that Sankaralinganar was the one who proved that the identity of the Tamil people is greater than life itself.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.