60 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணை நீர்மட்டம்! (அக். 14)
மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம் தொடர்பாக...

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 14) மாலை நிலவரப்படி, வினாடிக்கு 787 கன அடியிலிருந்து வினாடிக்கு 696 கன அடியாக குறைந்தது .
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 59.58 அடியிலிருந்து 59.13 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 24.04 டிஎம்சியாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செப்டம்பா் 1ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைவு காரணமாக அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
As of this evening (October 14), the inflow of water into Mettur Dam decreased from 787 cubic feet per second to 696 cubic feet per second.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


