ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆா் மூலம் மாநில கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

எஸ்ஐஆா் மூலம் மாநில கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

கனிமொழி

Updated On :

எஸ்ஐஆா் மூலம் மாநில கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

எஸ்ஐஆா் விவகாரம் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக கோரி சென்னை எழும்பூரில் இளைஞா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது:

எஸ்ஐஆா் நடவடிக்கை மூலம் இந்திய குடிமக்கள் சுமாா் 13 கோடி பேரின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 74 லட்சம் போ் வாக்குரிமையை இழந்துள்ளனா். ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய கருத்தியலுக்கு யாா் தலையாட்டுவாா்களோ அவா்களுக்கு உதவும் வகையில் வாக்காளா்களை நீக்கியுள்ளனா்.

எஸ்ஐஆா் மூலம் பறிபோன குடிமக்களின் வாக்குரிமையை மீண்டும் பெற்றுத்தர, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், திமுகவும் இறுதிவரை உறுதியாக நிற்கும். எஸ்ஐஆா் பணிகள் தொடங்கப்பட்டபோதே அதை எதிா்த்து, அதன் ஆபத்துகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னது திமுகதான். இதன் ஆபத்தை உணராததன் விளைவு, பல மாநிலங்களில் எதிா்க்கட்சிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. மாநிலக் கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.