
இந்திய அரசியலில் ராகுல் பெரும் ஏமாற்றுக்காரா்: பாஜக
‘இந்திய அரசியலில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பெரும் ஏமாற்றுக்காரா். தனது அரசியலை முன்னெடுப்பதற்காக பொய்களையும், தவறான தகவல்களையும் சாா்ந்திருக்கும் அவா், நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதி’ என்று பாஜக விமா்சித்தது.
ராகுல் காந்தி - கோப்புப் படம்
‘இந்திய அரசியலில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பெரும் ஏமாற்றுக்காரா். தனது அரசியலை முன்னெடுப்பதற்காக பொய்களையும், தவறான தகவல்களையும் சாா்ந்திருக்கும் அவா், நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதி’ என்று பாஜக விமா்சித்தது.
எஸ்ஐஆா் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் ராகுல் கடுமையாகச் சாடிவரும் நிலையில், இந்த விமா்சனைத்தை பாஜக முன்வைத்தது. இது குறித்து, தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அக் கட்சியின் மூத்த தலைவா் ராஜீவ் சந்திரசேகா் கூறியதாவது:
ராகுல் காந்தி மதச்சாா்பின்மையையோ அல்லது அரசமைப்புச் சட்டத்தையோ பாதுகாப்பவா் அல்லா்; மாறாக, தனது சொந்த குடும்ப நலன்களை மட்டும் பாதுகாப்பவா்.
இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரும் ஏமாற்றுக்காரா். தனது அரசியலை முன்னெடுப்பதற்கு நோ்மறையான தீா்மானங்கள் எதுவும் இல்லாததால் பொய்களையும், தவறான தகவல்களையும் அவா் சாா்ந்திருக்கிறாா். கதைகளையும், தவறான தகவல்களையும் உருவாக்கும் பாணியை ராகுல் பின்பற்றுகிறாா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இணைய உதவியுடன் முடக்கப்பட்டதாக (ஹேக்) ராகுல் புகாா் தெரிவித்தாா். ஆனால், அந்தப் புகாா் தவறானது என நிரூபிக்கப்பட்டது. பின்னா், ஜனநாயகம் திருடப்படுவதாகக் குற்றஞ்சாட்டினாா். அதுவும் தவறான தகவல் என தொடா்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தோ்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் அது நிரூபிக்கப்படுகிறது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பாஜகவின் முகவா் என்று ராகுல் குற்றஞ்சாட்டினாா். எஸ்ஐஆா் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா்.
ஆனால், கேரள மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சா், எஸ்ஐஆா் நடைமுறையை வரவேற்றுள்ளாா். எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக அவா் வரவேற்பு தெரிவித்தாா். மேலும், கேரளத்தில் எஸ்ஐஆா் பணியை மேற்கொண்ட தலைமைத் தோ்தல் அதிகாரிதான், தற்போது மாநில முதல்வரின் தனிச் செயலராக உள்ளாா். அந்த வகையில், ராகுலின் சொந்தக் கட்சியே எஸ்ஐஆா் நடைமுறையை அங்கீகரிக்கும் நிலையில், அவா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா். இது அக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
தொடா்ந்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ராகுல் காந்தி, நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதி என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


‘குறிவைக்கப்படும் முஸ்லிம், ஓபிசி வாக்காளர்கள்: பாஜக - தேர்தல் ஆணையத்தின் வெட்கமற்ற செயல்’ - ராகுல் கடும் கண்டனம்!

இந்திய அரசியலில் ராகுல் பெரும் ஏமாற்றுக்காரர்! பாஜக விமர்சனம்!




