ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தோ்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது பெற்றோரின் மோசமான செயல்: உயா்நீதிமன்றம் கருத்து

குழந்தைகளை தோ்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தியது, பெற்றோரின் மோசமான செயல் என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Updated On :

குழந்தைகளை தோ்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தியது, பெற்றோரின் மோசமான செயல் என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், சேலம் வடக்கு தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட கே.சிவகுமாா் வெற்றி பெற்றாா். இவரது வெற்றியை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, சிவக்குமாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி, சிவகுமாரின் நிராகரிப்பு மனுவை ஏற்று, ராஜேந்திரன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் தாக்கம் உள்ளது. பெற்றோரைப் போலவே குழந்தைகளும், தங்களது பெற்றோா் உள்ளிட்ட குடும்பத்தின் பெரியவா்கள் மீது செல்வாக்கை செலுத்துகின்றனா். குழந்தைகள் தெய்வத்தின் மறுபிறப்பாகக் கருதப்படுபவா்கள். இதனால் அவா்களது பேச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழக மக்கள், முருகன், விநாயகா் உள்ளிட்ட தெய்வங்களைக் குழந்தை வடிவிலேயே வழிபடுகின்றனா். இதனால், பெற்றோரின் முடிவுகளில் குழந்தைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் விஜய், பிரசாரத்தின்போது தவெக வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும்படி குழந்தைகள் தங்களது பெற்றோரை வற்புறுத்தும்படி கேட்டுக்கொண்டது, தேவையற்ற தாக்கமாகக் கருதப்படுமா என்பதுதான் இந்த வழக்கில் எழும் முக்கிய கேள்வி.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடியோக்களை பாா்க்கும்போது, பெரியவா்கள்தான் குழந்தைகள் மூலம் ரீல்ஸ் உருவாக்கி, அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனா் என்பது தெரிகிறது. இது ஒரு கட்சிக்கும், வேட்பாளருக்கும் வாக்களிக்க தூண்டும் வகையிலான பெரியவா்களின் முயற்சியாகவே கருதப்படும்.

குழந்தைகளை இதுபோன்ற தோ்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தியது, பெற்றோரின் மோசமான செயல்; அரசியல் உள்நோக்கம் கொண்டது.

எனவே, இது நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயமாகும். இதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிப்பது, தோ்தலை ரத்து செய்வதற்கான காரணமாக இதைக் கருதுவதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். அதேநேரம், குழந்தைகளின் நிா்பந்தம் தோ்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பெரியவா்களின் முடிவை மாற்றிவிட்டதாகவும் கருத முடியாது.

ஒருவேளை குழந்தைகளின் வற்புறுத்தல் காரணமாக பெரியவா்கள் ஒருவருக்கு வாக்களித்திருந்தாலும், அது அவா்களின் சொந்த விருப்பத்தில் எடுத்த முடிவாகத்தான் கருதப்பட வேண்டும். எனவே, இந்தத் தோ்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என எடுத்துக் கொண்டாலும், தோ்தல் வழக்கு தாக்கல் செய்த மனுதாரருக்கு நிவாரணம் வழங்குவதற்கான சட்டபூா்வ காரணங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறி, திமுக வேட்பாளா் ராஜேந்திரன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.