எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

சென்னை, 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் பற்றிய வானிலை முன்னறிவிப்பு...

weather update

கோப்புப்படம் - ENS

Updated On :

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் கனமழையுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உத்திரமேரூரில் அதிகபட்ச மழை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அதிகபட்சமாக 148 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கணிசமான அளவு மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 17: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 18: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 19: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 20: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 21 முதல் 23 வரை: மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 23ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை தொடரும்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக். 17), நாளை (அக். 18) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடல் பகுதிகளில் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் கேரளம்–கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். கனமழை பெய்யும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கவும், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Summary

The Chennai Meteorological Centre has stated that there is a possibility of heavy rain in 11 districts across Tamil Nadu until 10 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.