சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் தேவாவின் உடல்!
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல் இறுதிச் சடங்குக்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுவது குறித்து...

சாலை வழியாக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் தேவாவின் உடல். - படம் - விடியோ கிளிப்
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடல் இறுதிச் சடங்குக்காக அவரது சொந்த ஊரான சங்கரமநல்லூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா(75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (அக். 17) காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில், மறைந்த தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமநல்லூருக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
Summary
The body of late composer Deva is being taken to his hometown of Sankaramanallur for the last rites.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


