வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

தேவாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய மஞ்சணத்தி படக்குழுவினர்!

மறைந்த தேவாவின் உருவப்படத்துக்கு மஞ்சணத்தி படக்குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியது குறித்து...

மஞ்சணத்தி படக்குழுவினர் .

Updated On :

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உருவப்படத்துக்கு மஞ்சணத்தி படக்குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா(75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (அக். 17) காலமானார்.

சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தேவாவின் உடல் இறுதிச் சடங்குக்காக அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமநல்லூருக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. 

400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படக்குழுவினர், மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்தனர்.

Summary

The Manjanathi film crew paid tribute to the late composer Deva by lighting candles.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.