சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைஅரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவுஇந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர்

தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது பற்றி...

rain

தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - Photo : Windy

Updated On :

தமிழ்நாடு கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்றுமுதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், அதையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக புதன்கிழமை வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (அக்.21) மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கக்கடலில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகின்ற அக். 23 ஆம் தேதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Summary

A low pressure area has formed off the Tamil Nadu coast!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.