முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

பணியின்போது இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி காப்பீட்டுத் தொகை! முதல்வர் வழங்கினார்

காவலர் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்.

 CM provides insurance benefits to families of policemen who died on duty

பணியின்போது இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கினார் முதல்வர். - DIPR

Updated On :

காவலர் வீரவணக்க நாளையொட்டி, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)  வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததை நினைவுகூரும் வகையிலும், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் இந்தநாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

முதல்வர் ஜோசப் விஜய் இன்று (21.10.2026) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், அவ்வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். 

மேலும், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 6 காவலர்கள் உள்பட இந்தியாவில் 154 காவலர்கள்/அதிகாரிகள் பணியின்போது வீரமரணம் அடைந்துள்ளனர். இவர்களது உயிர்த்தியாகம் போற்றுதலுக்குரியது.

இந்நிகழ்ச்சியில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியின்போது உயிர்நீர்த்த காவல்துறையினரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Summary

CM provides insurance benefits to families of policemen who died on duty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.