சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!இந்தியா - போலந்து உறவை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை முயற்சிகள்: பிரதமர் மோடிஅடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல்! அமித் ஷா கடும் விமர்சனம்தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி!பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!

சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக...

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Updated On :

சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,16,424  மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், மாதாந்திர உணவுக்கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது.

இதன்படி, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1,16,424 (ஆதிதிராவிடர் நலம் – 91,424 + பழங்குடியினர் நலம் – 25,000)  மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக, அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை கூடுதல் செலவினமாக ரூ. 29,41,29,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் வகையில், ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Summary

The food charges for students in hostels run by the Department of Social Justice have been increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.