தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

முதல்வர் விஜய் பேசுவதுபோல ஏஐ விடியோ மூலம் பணமோசடி: இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்!

முதல்வர் விஜய் பேசுவதுபோல விடியோக்களைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த இளைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது பற்றி....

Madras HC

சென்னை உயர்நீதிமன்றம் - IANS

Updated On :

முதல்வர் விஜய் பேசுவதுபோல செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோக்களைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால், இந்த 'வாட்ஸ் ஆப்' எண்ணை தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவதுபோல், விடியோ வெளியிட்டு, பண மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த, ஷ்யாபுகான் என்பவரை தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார், கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி கைது செய்தனர்.

ஜாமீன் கோரி ஷ்யாபுகான் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனது நண்பர் சக்ருல்லா தான் பேஸ்புக் கணக்கு துவங்கி, போலி விடியோக்களை உருவாக்கி குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும், உண்மையை தெரிந்துகொள்ளாமல் தன்னை போலீசார் கைது செய்துள்ளதாகவும், தான் அப்பாவி என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், 40 நாள்களாக மேல் சிறையில் இருப்பதால் தனது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி என்.ரமேஷ், முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், புலன் விசாரணை முடிந்து விட்டதாகவும்,10 நாள்களில் குற்றப்பதிரிகை தாக்கல் செய்ய படும் என்றும், மனுதாரர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் பிடிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இதுமாதிரியான மோசடிகள் நிறைய நடந்துள்ளன, காவல்துறை ஒருவரைத்தான் பிடித்துள்ளது, இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்துவிட்டது, மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஷ்யாபுகானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் மறு உத்தரவு வரும்வரை தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Summary

Money laundering through AI video as CM Vijay speaks: bail for youth by Madras Highcourt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.