மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சிறுவர்கள் மாயமாகும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது பற்றி...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.
•சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,
•கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும்,
•கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்
வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை “#LeoDas”-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் “சமூகநீதி” என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?
ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?
இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா?
சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்,
மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi K. Palaniswami has urged the Tamil Nadu government to rescue the missing children and investigate the matter from all angles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


