பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரசாரம் பற்றி...
எடப்பாடி பழனிசாமி
பெட்டி மாறியதால் வந்த தேர்தல்தான் இந்த இடைத்தேர்தல் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுகவில் நின்று மக்களால் பெருவாரியாக வெற்றி பெற்ற ஒருவர் கட்சித்தாவுவது குதிரை பேரம் இன்றி வேறு என்ன காரணம்? குதிரை பேரம் காரணமாக இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. அமைச்சர் ஆவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பெரிய துரோகம் இது.
ஓட்டுப் போட்ட மக்களையும் மதிக்கவில்லை. வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் மதிக்கவில்லை. அப்படிப்பட்ட துரோகியை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள். கட்சி மாறி போட்டியிடும் தவெக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும். இடைத்தேர்தலில் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இரண்டரை மாதமாக ஜெம் வீரமணியை கைது செய்யாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி காப்பாற்றியது. இடைத்தேர்தல் நடப்பதால் பச்சைப் பொய்யை முதல்வர் நேற்று சொல்லியுள்ளார்.
இடைத்தேர்தலில் மக்களிடத்தில் அனுதாபம் பெற வேண்டும் என்பதற்காக நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஜெம் வீரமணி நடத்திய நிகழ்ச்சியில் தவெக அரசின் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர். வீரமணி தனது குடும்ப நண்பர் என்று தவெக அமைச்சர் ஒருவரே கூறுகிறார். இதன்மூலம் குற்றம்சாட்டப்பட்டவரை பாதுகாக்கின்ற ஆட்சி இந்த தவெக ஆட்சி. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு வேறொரு கட்சியின் மீது பழி சுமத்துகின்றனர். சிறுமிகளைச் சீரழித்தவர்களுக்கு முதல்வர் விஜய் என்ன தண்டனை பெற்றுத் தரப் போகிறார்?
தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் இடைத்தோ்தல் இதுவரை இந்தியா பாா்க்காத வித்தியாசமான தோ்தல். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்து மீண்டும் அவா்களே போட்டியிடுவது இதுவரை காணாத தோ்தல் என்று தெரிவித்துள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi K. Palaniswami has stated that this by-election is an election that came about because the box was changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





