அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

வீரமணி விவகாரத்தில் முதல்வர் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி பற்றி...

CM gave false information in Veeramani issue: Edappadi K. Palaniswami's accusation

எடப்பாடி பழனிசாமி.

Published On :

ஜெம் வீரமணி விவகாரத்தில் முதல்வர் தவறான தகவலை கூறியுள்ளார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுராந்தகத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், வீரமணி வழக்கை மெத்தனமாகவே கையாண்டது தவெக அரசு. இந்த வழக்கில் பல முறை வாய்தா கொடுக்கப்பட்டுவிட்டது, மீண்டும், மீண்டும் கேட்பதா என நீதிபதி கண்டித்தார். நீதிபதி கண்டித்ததால்தான் வழக்கு விசாரணை தீவிரமானது.

முதல்வர் உத்தரவின் பேரில்தான் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டார் என்பது தவறான தகவல். நீதிபதி உத்தரவின் பேரிலேயே கைது செய்யப்பட்டார். வீரமணி விவகாரத்தில் முதல்வர் தவறான தகவலை கூறியுள்ளார். திமுக ஆட்சியில் இருந்தபோதே ஜெம் வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

போக்சோ வழக்கில் முதல்வர் விஜய் அரசியல் ஆதாயம் தேடுகிறார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணிக்கு தவெக அரசு உடந்தையாக உள்ளது. வீரமணியின் விழாவில் தவெக அமைச்சர்கள் பங்கேற்றனர். முதல்வர் விஜய் சினிமாவில்தான் நடித்தார் என்றால் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 250 கொலைகள் நடந்திருக்கின்றன. 300 பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கின்றன. தவெக ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடுகின்றனர். எடப்பாடி தவெக வேட்பாளரை நான் விலைக்கு வாங்கிவிட்டதாக ஆதவ் கூறுவது பொய்யான தகவல்.

சேலத்தில் விஜய் பிரசாரம் செய்தபோதும் எடப்பாடியில் நான்தான் வெற்றி பெற்றேன் என்றார்.

Summary

AIADMK General Secretary Edappadi K. Palaniswami has accused that the Chief Minister has provided false information regarding the Veeramani issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER