ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

நீலகிரியில் 62 இடங்களில் மண்சரிவு: சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

நீலகிரியில் மண்சரிவு ஏற்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது பற்றி...

Nilgiris

நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு... - கோப்புப்படம்

Updated On :

நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளநா.

இதனால் நீலகிரி குன்னூர் மலைப்பாதையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த வழியில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இதில் அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ஒரு இடத்தில் மட்டும் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று 3 ஆவது நாளாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ஓரிரு நாள்களில் போக்குவரத்து சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மண்சரிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கனமழை பெய்ததால் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை அக். 29 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின் படி,கோத்தகிரி, கொனவக்கரை மற்றும் கெங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை கூடுதல் ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.