சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

அரசியலுக்கு வருவீர்களா? நடிகர் தனுஷ் கொடுத்த மகிழ்ச்சியான பதில்!

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு தனுஷ் கொடுத்த பதில் பற்றி..

Dhanush-starrer

நடிகர் தனுஷ்

Updated On :

நடிகராக இருந்த விஜய், அரசியலில் நுழைந்து, இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகியிருக்கும் நிலையில், அடுத்து நடிகர் தனுஷ் அரசியலில் நுழையப்போகிறார் என்ற யூகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்று அவரது ரசிகர்களும், தவெகவுக்கு எதிரானவர்களும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளைப் பதிவிட, அவர் வந்தால் அது பற்றி பேசுகிறோம் என அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் சொல்ல இன்னும் முடிவடையாத விவாதமாகவே இருந்து வருகிறது.

சரி, அரசியலுக்கு வருவேன்; இல்லை வர மாட்டேன் என்று தனுஷ் நேரடியாக பதில் சொல்லி இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை.

ஆனால், எரியும் ஊகங்களுக்கு நடிகர் தனுஷ் எண்ணெய் ஊற்றி வருகிறார். இந்த ஊகங்கள் தோன்றியதற்குக் காரணமே, நடிகர் தனுஷ், தன்னுடைய ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியதுடன் அதன் மூலம் உதவிகளையும் அளித்து வருகிறார்.

இதன்போதுதான், அவர் புதிதாக கட்சி தொடங்கப் போகிறார் அல்லது பிரதான கட்சியில் இணையப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் கருத்துகள் பதிவிட்டனர். சில கட்சிகளிலிருந்து அவருக்கு நேரடியாகவே அழைப்புகளும் வந்தன.

இந்த ஊகங்கள் ஒருபுறமிருக்க, சென்னை செம்மஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தனுஷ் தலைமையில் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3000 பேர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற தனுஷ் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிவிட்டு கிளம்பியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு காமாட்சியம்மன் விளக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என்று சொல்லும் வகையில் வெரி ஹேப்பி என்று பதிலளித்துள்ளார். சரி இவரிடம் இப்படியெல்லாம் கேட்டால் ஆகாது, அரசியலுக்கு வருவீர்களா என்று நேரடியாகவே கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் கொடுத்த பதில் என்ன தெரியுமா? ஹேப்பி தீபாவளி என்பதுதான்.

ஒன்று அரசியலுக்கு வருவேன், இல்லை தெரியவில்லை, வர மாட்டேன் என ஏதேனம் ஒரு பதிலைத்தான் சொல்ல வேண்டும். ஏன் இந்த பதில் என பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கிடையே, நடிகர் தனுஷ், தன்னுடைய ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியதுடன் சமீபமாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறார். மேலும், அவர் புதிதாக கட்சி தொடங்கப் போகிறார் அல்லது பிரதான கட்சியில் இணையப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவுக்கு தனுஷ் வந்தால், அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூறினார்.

இதனிடையே, சென்னை செம்மஞ்சேரியில் இன்று (அக். 25) தனுஷ் தலைமையில் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தனுஷ் ரசிகைகளும் நற்பணி இயக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு சைவ, அசைவ விருந்தும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ், வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும், அங்கிருந்தோருக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லிவிட்டு கிளம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 3,000 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

Will you enter politics? Actor Dhanush gives a Happy response!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.