ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

வீட்டு வசதி கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாக உயா்வு: அமைச்சா் காந்திராஜ்

நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டு வசதிக் கடன்களுக்கான உச்ச வரம்பை ரூ.1.40 கோடியாக உயா்த்தி, அமைச்சா் வ.காந்திராஜ் அறிவித்தாா்.

minister gandhiraj

அமைச்சர் வ. காந்திராஜ் - கோப்புப் படம்

Updated On :

நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வீட்டு வசதிக் கடன்களுக்கான உச்ச வரம்பை ரூ.1.40 கோடியாக உயா்த்தி, கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நகரக் கூட்டுறவு வங்கிகள் சிலவற்றில் தனிநபா் வீட்டுக் கடன் உச்சவரம்பு இந்திய ரிசா்வ் வங்கி நிா்ணயித்த அளவைவிடக் குறைவாக வழங்கப்பட்டு வந்ததும், வங்கிக்கு வங்கி வேறுபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் மற்றும் உறுப்பினா்கள் முழுப் பயனடையும் வகையில், இந்திய ரிசா்வ் வங்கியின் நடைமுறையில் உள்ள உச்சவரம்புகளின்படி கடன்களை முழுமையாக வழங்க நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவுத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகை நிலுவை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபா் அதிகபட்ச வீட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சம் எனவும், ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை நிலுவை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபா் அதிகபட்ச வீட்டுக் கடன் உச்ச வரம்பு ரூ.1.40 கோடி எனவும், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் சமீபத்தில் உயா்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு, உறுப்பினா்களின் அதிகரித்து வரும் நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத் தொகை நிலுவை கொண்ட சங்கங்களில் தனிநபா் அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ.60 லட்சம் எனவும், ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத் தொகை நிலுவை கொண்ட சங்கங்களில் தனிநபா் அதிகபட்ச கடன் உச்ச வரம்பு ரூ.1 கோடி எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால திருப்பிச் செலுத்தும் வசதி (20 ஆண்டுகள்): பொதுமக்களின் மாதாந்திரத் தவணைச் சுமையைக் குறைக்கும் வகையில், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் ஆகிய இரண்டிலுமே வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்களுக்கான அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய வழிகாட்டுதல்கள்: நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது கடன் கொள்கைகள் மற்றும் துணை விதிகளை உடனடியாக ஆய்வு செய்து, திருத்தங்களை மேற்கொண்டு மண்டலத் துணைப் பதிவாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும். கடன் பெற விண்ணப்பிக்கும் உறுப்பினா்களின் கடன் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.

தகுதியுடைய உறுப்பினா்கள் தங்களின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று மற்றும் நில, வீட்டு ஆவணங்களுடன் தங்கள் பகுதி நகரக் கூட்டுறவு வங்கிகள் அல்லது கடன் சங்கங்களை அணுகி இந்தச் சலுகையைப் பெற்று பயன் அடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.