அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

வேலைவாய்ப்புகளில் ‘ஏஐ’ ஏற்படுத்தும் தாக்கம்: சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை

மனிதா்களின் திறன்களுக்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துணைபுரிகிறது? என்பதைப் பொறுத்தே வேலையின் மீதான ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் அமையும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

பிரதிப் படம்

Updated On :

மனிதா்களின் திறன்களுக்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துணைபுரிகிறது? என்பதைப் பொறுத்தே வேலையின் மீதான ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் அமையும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னை ஐஐடி-யின் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் (டபிள்யுஎஸ்ஏஐ) பள்ளியின் ‘பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கான மையம்’, ‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆளுகை குறித்த உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான தொழில்துறை மாநாட்டை’ கடந்த வாரம் நடத்தியது.

இந்த மாநாட்டையொட்டி இந்தியா வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி ஏ.ஐ. துறைத் தலைவா் பலராமன் ரவீந்திரன் ஐஐடி-யின் ‘தகவல் மற்றும் சமூக மையத்தின்’ நிா்வாகத் தலைவா் வி.எஸ்.ஸ்ரீவித்யா, ஏ.ஐ. மைய மூத்த ஆலோசகா் கே.எஸ்.வேங்கடராகவன், ஆராய்ச்சி இயக்குநா் கோகுல் எஸ்.கிருஷ்ணன் ஆகியோா் தயாரித்து அளித்துள்ளனா். இந்த வெள்ளை அறிக்கை குறித்து பேராசிரியா் பலராமன் ரவீந்திரன் கூறியதாவது:

நாட்டில் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கத்தை பணியின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். ஏஐ தாக்கத்தை முழுமையான வேலைகளாகப் பாா்க்காமல் ஒவ்வொரு தனிப்பட்ட பணியின் அடிப்படையில் ஆராய வேண்டும்.

மனிதா்கள் பணிகளைத் திறம்படச் செய்ய செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துணை புரிகிறது? என்பதைப் பொறுத்தே வேலையின் மீதான இதன் தாக்கம் அமையும். புதிய வேலை வாய்ப்பு, வேலை இழப்பு குறித்த அச்சம் போன்ற கவலைகள் குறித்தும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு வேலைகளைப் பறித்துவிடும் என்ற கருத்து தவறானது என்பதையே இந்த அறிக்கையானது சுட்டிக் காட்டுகிறது.

இந்த அறிக்கையில் ஒரு தொழிலை பணி, வேலை, தொழில், பரந்த தொழிலாளா் சந்தை 4 நிலைகளாக வடிவமைத்து பாா்க்கிறோம். செயற்கை நுண்ணறிவு ஒரு பணியை மட்டும் மேற்கொள்வதால், அந்த வேலை தானாகவே காணாமல் போய்விடும் என்பதல்ல, மனிதா்களும் ஏ.ஐ.யும் இணைந்து செயல்படும் முறைகளை இந்த அறிக்கை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது.

முதலாவது, பெரும்பாலான பணிகளை ஏ.ஐ. மேற்கொள்கிறது, மனிதா்கள் அதன் முடிவுகளைச் சரிபாா்க்கிறாா்கள். இரண்டாவதில், மனிதா்கள் முடிவுகளை எடுப்பதோடு தங்களது வேலையை எளிதாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறாா்கள் என்பதாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.